Tuesday, 15 August 2017

சென்னையின் கண்புரைக்கான மிகச் சிறந்த சிகிச்சை


கேட்ராக்ட் என்பது வயோதிகம் காரணமாகவோ, பரம்பரை, விபத்துகள், நீரிழிவு நோய் போன்ற பல காரணங்களால் கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் சக்தியை இழப்பதினால் வரக்கூடிய தன்மை. இதன் காரணமாக லென்ஸில் ஒரு படலம் படர்ந்தது போன்ற சூழ்நிலையில் பார்வை தெளிவாகத் தெரியாமல் மங்கலாகத் தெரிகிறது. நாளடைவில் இந்நிலை அதிகரித்து முழு பார்வை இழப்பிற்கும் காரணமாகிறது. இந்த நிலையே கேட்ராக்ட் அல்லது கண்புரை எனப்படும்.http://www.amrithospital.com/cataract.html


எப்போது அறுவை சிகிச்சை தேவை?
உங்கள் அன்றாட வேலைகளை பாதிக்கத் துவங்கும் போது. ஒவ்வொரு கண்ணாக மூடி, தனிப்பட்ட பார்வை குறைகிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். பழுப்பு நிறக் காட்டராக்டுகள், பார்வைக்குறைவு அவ்வளவாக இல்லாவிடினும் ,கடினமாகிக் கொண்டே போகும். சாதாரணமாக நுங்கு போல் தன்மையிலிருந்து, புளியங்கொட்டை போன்ற கடினமாகும் தன்மை கொண்டது காட்டராக்ட்.

கேட்ராக்ட் நோய்யின் வகைகள்

 • துணை காப்ஸ்யூலர் கண்புரை : இது லென்ஸின் பின்புறத்தில் ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் அல்லது ஸ்டீராய்டு மருந்துகளின் அதிக அளவை எடுத்துக் கொண்டவர்களுக்கு இவ்வகை கண்புரை ஏற்படுகிறது.
 • கால்சார் கண்புரை : லென்ஸின் விளிம்பிலிருந்து தொடங்கி, பேசப்படும் பாணியில் மையத்திற்கு செல்லும் வழியில் வெள்ளை, பிறை வடிவ வடிவிலான ஒற்றுமைகளால் இது வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகையான கண்புரை முக்கியமாக லென்ஸின் வளி மண்டலத்தில் ஏற்படுகிறது, இது மையக்கருவை சுற்றியுள்ள லென்ஸின் பகுதியாகும்.
 • அணு கண்புரை : இது லென்ஸின் மையத்தில் ஆழமாக உருவாகிறது. அணு கண்புரை பொதுவாக வயதானவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கேட்ராக்ட் என்பது பொதுவாக வயோதிகர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்னையா? அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன?

 • கேட்ராக்ட் பொதுவாக வயோதிகர்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்னை என்றாலும் எல்லா வயதினர்களையும் பாதிக்கக்கூடிய கண் சார்ந்த ஒரு பிரச்னை ஆகும். குறிப்பாக,
 • சூரிய ஒளியிலிருந்து அதிகமாக வெளிப்படக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் பணியாற்றுபவர்களுக்கும்,
 • நீரிழிவு நோய் போன்ற காரணத்தினாலும்,
 • கண்களில் ஏதேனும் நோய் தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தாலும்,
 • பரம்பரை மூலக்கூறியல் காரணங்களாலும்
 • நாம் பிறப்பதற்கு முன்பே நமது தாய்க்குப் பிரசவ காலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மை நோய் ஏற்பட்டிருந்தாலும்,
 • நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்திருந்தாலும்
 • கிட்டப்பார்வை கோளாறு நீண்ட காலம் இருந்திருந்தாலும்
 • கண்களில் காயம் ஏற்பட்டிருந்தாலும்
 • கண் சார்ந்த மற்ற நோய்கள் ஏதாவது இருந்தாலும்
 • புகைப்பிடிப்பதாலும் இளம் வயதினர் உட்பட யாருக்கும் கண்புரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
 • மேலும் பல்வேறு உயிர் வேதியியல் மாற்றங்கள் காரணமாகவும் கேட்ராக்ட் உருவாகலாம்.
 • புரோட்டின், வைட்டமின்கள் மேலும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துக் குறைபாடு இருந்தாலும் கேட்ராக்ட் உருவாகலாம்.

கேட்ராக்ட் நோயின் அறிகுறிகள்

ஆரம்ப நிலையில், கூச்சம் (glare), ஒளிச்சிதறல் இருக்கும். சூரிய வெளிச்சத்திலோ, அதிக ஒளி இருக்கும் போதோ, எதிரில் ஆள் வருவது தெரியும், ஆனால், யாரென்று முகம் தெளிவாக இருக்காது. குறைந்த வெளிச்சத்திலும் பார்வை கம்மியாக இருக்கும். போகப்போக, தினசரி வேலைகளைச் செய்ய முடியாத அளவிற்கு பார்வை, மறைக்கத் துவங்கும்.

கேட்ராக்ட் சிகிச்சை எவ்வாறு நடத்தப்படுகிறது?

கேட்ராக்ட் சிகிச்சையின் மூலம் நிச்சயமாக கண்பார்வை பெற முடியும். மேலும், அறுவை சிகிச்சை போது, கருவிழியின் பாதிப்படைந்த லென்ஸை நீக்கி விட்டு அதற்கு பதில் பிளாஸ்டிக் IOL பொருத்தி தெளிவான பார்வை பெற வழி வகுக்குகிறது.

எங்கள் அம்ரித் மருத்துவமனையில் கேட்ராக்ட் நோய்க்கான அதி நவீன கருவிகளைக் கொண்டு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் சிகிச்சை மிக குறைவான கட்டணத்தில் செய்யப்படுகிறது. மேலும் எங்கள் மருத்துவமனையில் கண் சம்பந்தபட்ட எல்லா நோய்களுக்கும், தோல் சம்பந்தப்பட்ட மற்றும் சிறுநீரக சம்பத்தப்பட்ட எல்லா விதமான நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


 Visit us: www.amrithospital.com
Mail us: amrithospitalchennai@gmail.com
http://www.amrithospital.com/contact-us.html

சென்னையின் கண்புரைக்கான மிகச் சிறந்த சிகிச்சை

கேட்ராக்ட் என்பது வயோதிகம் காரணமாகவோ , பரம்பரை , விபத்துகள் , நீரிழிவு நோய் போன்ற பல காரணங்களால் கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊட...